இந்தியா உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடாக மாறப்போகிறது.
இந்தியாவில் இனி ஒவ்வொருவரும் கோடீஸ்வரர்.
ஒவ்வொரு குடும்பமும் கோடீஸ்வர குடும்பமாக ஆகப் போகிறது.
ஒவ்வொரு இந்தியனின் கனவும் நிஜமாகப் போகிறது.
ஆம் புதிய இந்தியா பிறக்கப் போகிறது.
முன்னொரு காலத்தில் நம் தாய் திருநாடு உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தது.
மாட மாளிகை, கூட கோபுரங்களுடன் மிகப்பிரமாண்டமான அழகிய அரண்மனைகள்,கோவில்கள்,மக்களின் வாழ்விடங்கள் என கற்பனைக்கே எட்டாத அழகுடன், வளமுடன் நம் பாரதம் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.
நம் முன்னோர்கள் பட்டாடைகளுடன், தங்க ஆபரணங்களுடன், வீதியிலே செல்வச் செழிப்புடன் உலா வந்தார்கள்.
மக்களின் வீடுகளிலும், அரண்மனை கஜானாக்களிலும், கோயில்களிலும், தங்கம், வெள்ளி, வைரம்,வைடூரியம், என நிரம்பி வழிந்தது.
நமது விவசாயப் பெருங்குடி மக்களின் அறிவால் திறமையால் விவசாயம் செழித்து உணவு உற்பத்தியின் மூலம் தானிய களஞ்சியங்கள் எல்லாம் நிறைந்துமக்கள் அனைவரின் வீட்டிலும் அன்னலட்சுமி தாண்டவம் ஆடினாள். வந்தவர்கள் எல்லாம் இல்லைஎனாதபடி வயிறார பசியாறிப் போனார்கள்
உலகிலேயே செல்வ வளம் மிக்க நாடாக நமது இந்தியா இருந்ததால்தான் பல நூற்றாண்டுகளாய் அயல் நாட்டவர்களாலும், ஆங்கிலேயர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு அதன் விளைவால் நம் இந்திய மக்கள் இன்றுவரை வறுமையுடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.
இப்படியுள்ள மக்களின் துயரத்தை துடைத்து ஐந்தே வருடத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் வறுமையை போக்கி மீண்டும் உலகிலேயே பணக்கார நாடாக மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு திட்டம் தான் வல்லரசு இந்தியா 2030
இந்தியாவில் தொடங்கப்படும் இத்திட்டம் இந்திய மக்கள் அனைவரின் வறுமையைத் தீர்த்து அவர்களை வசதி படைத்தவர்கள் ஆக்கி பின்னர் இத்திட்டம் உலகம் எங்கும் உள்ள ஏழை மக்களின் வாழ்வையும் உழைப்பாளிகள், இளைஞர்களின் வாழ்வையும் மாற்றி பணக்காரர்களாக்கி உலகையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.
இந்திய வரைபடத்தை மட்டுமல்லாமல் உலக வரைபடத்தையே மாற்றி அமைக்கக்கூடிய மாபெரும் இத்திட்டத்தால் பலன் அடைபவர்கள் தான் இருப்பார்களே தவிர பாதிப்பவர்கள் யாரும் இல்லை
நம் அரசுக்கு பல ஆயிரம் லட்சம் கோடிகளை அதாவது 100 ஆண்டுகள் வரி வருவாயை ஈட்டி தரக்கூடிய இத்திட்டத்தால் ஒரு ரூபாய் கூட அரசுக்கு செலவு இல்லை என்பதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம்.
ஐந்து வருடங்களில் முடிந்துவிடும் இத்திட்டத்தால் என்னவெல்லாம் சாத்தியமாகும் என்று பார்ப்போமா!